அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைய கனவு காண்போம் வாருங்கள் என்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடியேற்றி அழைப்பு விடுத்தார்.உலகையே வழி நடத்தும் நாடாக இந்தியா வளர வேண்டும். சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாட்டு மக்களுக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது. அடுத்த சுதந்திர தினத்திற்குள் புதிய இலக்கை எட்ட உறுதியேற்போம்.ஒரே நாடு, ஒரே வரி ஏற்கனவே அமலில் உள்ளது. 110 லட்சம் கோடியில் எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.