புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு சீல்

     புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநர் பொது அறிவிப்பு


  புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் செயல்பட்டு வரும் நியூ கிரசெண்ட் மேல் நிலைப் பள்ளி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளி ஆகும் எனவே, உடனடியாக இப்பள்ளியை மூட புதுச்சேரி கல்வித் துறை ஆணை பிறப்பித்துள்ளது.


  மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித் தகுதி செல்லாது. அதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளி / அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


                                    இவ்வாறு  பள்ளிக் கல்வி இயக்குநர் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.