கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வில்லியனுார் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் புதுச்சேரி மாநில தெற்கு பகுதி திமுக அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., மேற்பார்வையில் மாநில திமுக வர்த்தக அணி அமைப்பாளர் வில்லியனுார் சக்திவேல் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அவருடன் வில்லியனுார் திமுக தொகுதி செயலாளர் ராமசாமி உள்பட பலர் சென்றிருந்தனர்.