புதுச்சேரியில் 24 மணி நேர ஊரடங்கு

புதுச்சேரியில் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக முதல்வர் நாராயணசாமி பல்வேறு நடவடிக்கைகளை  தீவிரமாக. எடுத்து வருகிறார்.  அதன் ஒரு கட்டமாக ஆகஸ்டு 18ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) முதல் காலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் கடைகள், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.