இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் பாண்டுரங்கன் கபசுரக்குடிநீர் வழங்கல்



 உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.இதன் ஒரு கட்டமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவின் பேரில் வில்லியனுார் தொகுதி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாண்டுரங்கன் கடந்த இரண்டு மாதமாக தனது சொந்த முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார். தொடர்ந்து அமைச்சரின் மேற்பார்வையில் 9 வது வாரமாக கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார். பொதுச்செயலாளர் பாண்டுரங்கனை நேரில் அழைத்த அமைச்சர் நமச்சிவாயம் அவரின் நற்பணிகளை மனம் திறந்து பாராட்டினார்.