புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்த பேட்டி:
புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆறாயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு விதிமுறைகள் வரும் வரை உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
புதுச்சேரியிலிருந்து வெளியே செல்பவர்களும், வெளியே இருந்து புதுச்சேரி வருபவர்களும் கட்டாயம் இபாஸ் பெற வேண்டும்.
இனி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு கிடையாது.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.