முழு ஊரடங்கு தற்போது இல்லை அரசு

சென்னையில்  கொரோனா அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில்  வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசு சார்பில் இபாஸ் நிறுத்தப்பவில்லை அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தற்போது முழு ஊரடங்கு இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.