டாக்டர்.கலைஞர் 97 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க உழவர்கரை தொகுதி திமுக சார்பில் மூலக்குளத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு தொகுதி செயலாளர் கலிய.கார்த்திகேயன் தலைமையில் மாநில அமைப்பாளர் சிவா.எம்.எல்.ஏ மலர் துாவி மரியாதை செய்தார். தொடர்ந்து கார்த்திகேயன் ஏற்பாட்டில் இனிப்பு மற்றும் ஏழை, எளியோருக்கு அன்னதானம் ஆகியவற்றை சிவா, எம்.எல்.ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.