தனியார் பள்ளி கையும் களவுமாக சிக்கியது

முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ்



  பல்லடம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்புக்கு அரையாண்டு தேர்வு நடத்திய பள்ளி நிர்வாகத்தினர் கையும் களவுமாக பிடிபட்டனர்.திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் பள்ளிக்கு நேரடியாக சென்று இது பற்றி அதிரடி ஆய்வு நடத்தினார்.அப்போது மாணவர்கள் வீட்டிற்கு விடைத்தாளை எடுத்து சென்று எழுதி கொடுத்துள்ளனர். இதனையும் தீவிரமாக விசாரித்த கல்வி அலுவலர் ரமேஷ் மேலும்  பல்வேறு தகவல்களை கேட்டு திடுக்கிட்டார். இது பற்றி அந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.