தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வணிக பெரு மக்களுக்கு ஓர் வேண்டுகோள்
சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுவதை கவனத்தில் கொண்டு நாட்டின் நலன், மக்கள் நலன்,வணிகர் நலன் கருதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவுறுத்தலின் படி 16.06.2020 முதல் 30.06.2020 வரை காலை 06.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வியாபாரம் செய்து மதியம் 2.00 மணிக்கு கடைகள் அடைக்க வேண்டும் என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆக மூன்று மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். வணிகர்களும், பொது மக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் .சானிடேஷர் உபயோகப் படுத்த வேண்டும்.தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வணிகர்களையும்,பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வெள்ளையன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.