புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் அளித்த பேட்டி வருமாறு-
புதுச்சேரியில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களாலும் வேகமாக பரவி வரும் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை முதல்
கடைகள் காலை 6 மணி மதல் மதியம் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.
பெட்ரோல் பங்குகளும் மதியம் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.
புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்.
முகக்கவசம் அணியாமல் இனி வெளியே சென்றால் 100 க்குப் பதில் இனி 200 அபராதம் விதிக்கப்படும்.
மதுக்கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.
ஓட்டல்கள் மதியம் 2 மணிவரை அமர்ந்து சாப்பிடலாம்.இரவு 9 மணி வரை பார்சல் வழங்கலாம்.
கட்டுமான பணி, விவசாயம், இயங்க தடை இல்லை.
விவசாய பணிகள், அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவுப்படி செயல்படும்.
தொழிற்சாலைகள் இயங்க 3 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.
அனைவரும் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.