ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜீலை மாதம் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏற்கனவே தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துச்செய்யப்பட்டு ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது.எனவே இதனை பின்பற்றிடவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஆந்திர அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பொதுத்தேர்வு நடத்த பெற்றோர் மாணவர்கள் எதிர்ப்பு