புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு தாமதம் ஏன்?
புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் மே 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முடிவில் இன்று முதல் அதாவது மே 19 ஆம் தேதி மதுக்கடைகளை திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கான ஒப்புதல் துணை நிலை ஆளுநர் கிரண்பெடி அளிக்க வேண்டும். இதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப் பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.ஒப்புதல் கிடைத்தவுடன் மதுக்கடைகள் திறக்கப்படும்.அதன்படி மதுக்கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.