குவிந்திருக்கும் பாவங்கள் போக என்ன செய்ய வேண்டும்.


  இறைவன் வெளியிலும், வெகு தொலைவிலும் இருப்பதாகத் தோன்றும் வரையில் உங்களிடம் அஞ்ஞானம் இருக்கும். ஆனால், நம் உள்ளத்துக்குள்ளேயே அவன் இருப்பதாக உணர்ந்து கொண்டால் ஞானம் உண்டாகி விடும்.


  பக்தியுடன் பகவானின் நாமத்தைப் பாடுங்கள். அப்போது மலை போல குவிந்திருக்கும் உங்களது பாவங்கள் எல்லாம் நெருப்பு பொறி ஒன்றினால் மலை போலக் குவிந்த பஞ்சுப் பொதிகள் எரிந்து சாம்பலாவதைப் போல நசித்துப் போய்விடும்.


                                                                                                                          --ராமகிருஷ்ணர்.