நறுமணம் கமழும் வெட்டி வேர் முகக்கவசம்


 


  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் வைரசிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு வகையான முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர். அந்த வகையில் கடலுாரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வெட்டிவேர் பயிரிடுவதுடன் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரித்து முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர்.இதனை அந்த இளைஞர்கள் கடலுார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ.அபிநவ் ஆகியோரிடம் திங்கள் கிழமை அறிமுகப்படுத்தினர்.வெட்டி வெரில் உள்ள எண்ணெய் தன்மை கொண்ட நாரை பிரித்தெடுத்து பருத்தி துணியில் பின்னி முகக்கவசம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 நாட்களுக்கு வெட்டி வேரின் வாசம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.அதன் பின்னர் வழக்கமாக சலவை செய்து பயன் படுத்தலாம்.