புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு
புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முடிவில் நாளை முதல் அதாவது மே 19 ஆம் தேதி முதல் மதுக்கடைகளை திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மதுக்டைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். மேலும் மே 31 வரை ஊரடங்கு கட்டுப்பாட்டை தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.