புதுச்சேரி தெற்கு மாநில திமுக வர்த்தக அணி மாநில அமைப்பாளர் வில்லியனுார் மு.சக்திவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வில்லியனுார் தொகுதி மக்களுக்கு அன்னதானம், நிலவேம்பு கசாயம், மாஸ்க், காலை உணவு மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தொகுதி முழுவதும் சூறாவளியாக சுழன்று கொடுத்து வருகிறார்.
இந்த ஆபத்தான நேரத்திலும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நினைத்து தன் உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் சக்திவேல். இவரது பணியை தொகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.