முதலில் ஈஸ்வரனை நாடு, அதன் பிறகு உலகப் பொருளை தேடு.இதற்கு மாறாக செய்யாதே.
ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் பிரவேசித்தால் உனக்கு மன சஞ்சலமே இருக்காது.
மனதில் உள்ளதையே வாயால் சொல். உனது சொல்லுக்கும், நினைவுக்கும் ஒற்றுமை இருக்கட்டும்.அதே நேரம், உன் மனம் உலத்திலேயே உழன்று கொண்டிருக்கும் போது ”எல்லாம் ஈசுவரனே” என்று வாயால் மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.
--ராமகிருஷ்ணர்.