வியாழன் எனும் கிழமை சிவனை வழிபட்ட தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இந்த தலத்தின் பிரதான சிவன் கோயிலின் மூலவர் ஏகாம்பரநாதர்.
பஞ்சபூத தலங்களில் காஞ்சிபுரம் மண் தலம் ஆகும்.மண்ணால் லிங்கம் ஸ்தாபித்து உமாதேவி சிவனை பூஜித்த தலம்.ஆற்றின் வெள்ளத்தில் அந்த மண் லிங்கம் அடித்துப் போகாமல் இருக்க உமாதேவி அந்த லிங்கத்தை தழுவிக் காத்தாள். அப்போது அவளுக்கு லகுவாக லிங்கம் குழைந்து வந்தது. அதனால் தழுவக்குழைந்த பிரான் என்றும் சிவனுக்கு பெயர் உண்டு.
காஞ்சி காமாட்சி 32 அறங்களை வளர்த்த தலமும் இதுதான்.வியாழன் மட்டுமல்ல நவக்கிரகங்கள் அனைத்தும் ஒன்றாக வந்து வழிபட்ட இடமும் இத்தலத்தில் உள்ளது. இது போன்ற தலங்களில் இறைவன் சிவனையும் சிவ குருவையும் நவக்கிரகங்களில் தேவகுரு வியாழனையும் வணங்கி வழிபட்டால் சிவன் அருளோடு குரு பகவான் அருளும் நமக்கு வந்து சேரும்.