கொரோனா உயிரிழப்பு வேதனை தருகிறது மோடி

                    பாரத பிரதமர் மோடி உரை


 உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.இது வேதனையை தருகிறது. இந்த ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியது வேதனை அளிக்கிறது. இது போன்ற உலகளாவிய பொது முடக்கம் உலக மக்கள் இதுவரை காணாதது.கொரோனா மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது.வைரசுடன் போராடி உயிர்களை காக்க வேண்டும்.உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது.நாம் கூடுதல் உறுதியுடன் வைரஸ் தாக்குதலை சமாளிக்க  தயாராக வேண்டும்.கொரோனாவுக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக கடுமையாக போராடி வருகிறது இந்தியா.உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழ்நிலை கொண்டு வந்திருக்கிறது.உலகை இந்தியா வழிநடத்த வேண்டும்.தினசரி 2 லட்சம் பிபிஇ உடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.உலகுக்கு இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.. இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.கொரோனா போரில் கட்டாயம் வெற்றி பெறுவோம்.இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சி.உலகின் கொள்கைகளையே இந்தியா மாற்றி அமைத்து வருகிறது.தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகத்திலே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. உலகை இந்தியா வழி நடத்தும்.உலகில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.உலகம் என்பது ஒரே குடும்பம்தான். நமக்கு எப்போதும் சுயநலமில்லை.யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் 130 கோடி இந்தியர்களும் உறுதியேற்க வேண்டும்.உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள்.இந்திய மருந்துகள் உலகுக்கே தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது.வலிமையான இந்தியாவை உருவாக்க சரியான தருணம் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்தார் மோடி.இதன் மூலம் ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள் பயன் பெறுவர்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்  கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து உருக்கமாக பேசினார் மோடி.