புதுச்சேரியில் கேபிள் டிவியை அரசு ஏற்று நடத்த பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்


  புதுச்சேரி பாஜக கட்சி சார்பில் வருமானம் உள்ள கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தக் கோரியும், கேபிள் டிவி வரி முறைகேடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் இந்திராகாந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், மாவட்டத் தலைவர்கள் அனந்தன், தெய்வசிகாமணி, தொகுதி தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது.மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.