மவுனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான்.ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு, மனம் அலை பாய்ந்து கொண்டிருக்குமானால் அது மவுனம் ஆகாது. அதனால் எந்த பயனும் இல்லை.
கர்த்தா ஒருவன், நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நிச்சயம் பணிவு பிறந்து விடும்.
-- ரமணர்.