ஊரகப்பகுதிகளில் சலுான் கடைகளை திறக்க முதல்-அமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து சலுான் கடைகளை திறக்கலாம்.முடி திருத்துபவர் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.. முடி திருத்த வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர ஊரகப்பகுதிகளில் சலுான் கடைகளை திறக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.சென்னையில் சலுான் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
ஊரகப்பகுதிகளில் சலுான் கடைகளை திறக்க அனுமதி