புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு அமைச்சர் நமச்சிவாயம்

           


             புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


  நாளை அதாவது மே 25 ஆம் தேதி முதல் மதுப்பிரியர்கள் எதிர்பார்த்த மதுக்கடைகள் புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் திறக்கப்படுகிறது. கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.விற்பவரும், வாங்குபவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணித்திருந்தால் மட்டுமே மது விற்கப்படும். சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.மற்ற மாநிலங்களில் இருந்து கொரோனா தொற்று வந்து விடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் சில மது வகைகளுக்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.