உன் வரவில் எங்கள் விடியல்

உன் வரவில் எங்கள் விடியல் மழை பற்றிய கவிதை


ஓ மழையே ! மழையே !! மழையே !!!


உன் வரவே எங்கள் உறவே !


உன் விடியலே ! எங்கள் மகிழ்வே !


உன் மகிழ்வே ! எங்கள் வாழ்வே  !


உன் மகிழ்வே ! எங்கள் வாழ்வே  !


                                        ( மழையே ) 


மனிதன் நினைக்கின்ற மழையே !


நாங்கள் நனைகின்றோம் விழியிலே !


கண்ணீர் சிந்தும் நாங்கள் !


உன் வரவை காணாத போது !


                                      ( மழையே )


தண்ணீர் சிந்தும் மக்களே !


மரம், செடி, கொடிகளை நட்டீரா !


இல்லை சேமிக்கத்தான் கற்றுக்கொண்டீரா !


நம் சந்ததியின் நலம் காப்பீரா .


                                      ( மழையே )


                                        கவிதை ஆக்கம்                                                                                                                     விழிப்பிரியன் ( எ ) கார்த்திகேயன்,                                                                                        ஆசிரியர், வித்தகன் மலர் வார பத்திரிக்கை, புதுச்சேரி.