புரட்டாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் துர்க்கை தோன்றினாள். துர்க்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்க்கை என்று பெயர் வந்தது.துர்க்கா என்பதற்கு துன்பத்தை போக்குபவள் என்று பொருள்.
துர்க்கையை ராகு காலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு.திங்கள்கிழமை ராகு காலத்தில் வெள்ளை அரளிப்பூக்களாலும், செவ்வாய் ராகு காலத்தில் செவ்வரளி, செந்தாமரை மலர்களாலும் துர்க்கையை வழிபட வேண்டும். இதேபோல் புதன்கிழமை ராகு காலத்தில் துளசியாலும், வியாழக்கிழமை ராகு காலத்தில் சாமந்தி பூக்களாலும்,வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் வெள்ளை அரளியாலும், சனிக்கிழமை நீலோற்பவம் மலராலும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பாரிஜாதம், வில்வ இலையாலும் அர்ச்சித்து வழிபட துர்க்கையின் அருளுக்கு பாத்திரமாகலாம்.