அனுமந்தையில் பாஜகவில் 100 பேர் இணைந்தனர்

          அனுமந்தையில் பாஜகவில் 100 பேர் இணைந்தனர்


  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனுமந்தை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் பாஜக வில் இணைந்தனர். இதற்கான விழா அனுமந்தையில் சமூக இடைவெளியுடன் சிறப்பாக நடைபெற்றது. மரக்காணம் ஒன்றிய தலைவர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன், எக்ஸ்.எம்எல்ஏ, மற்றும் ராஜமாணிக்கம் தலைமையில் இணைந்தனர். இந்த இணைப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்த அமைப்பு சாரா பிரிவின் மாவட்ட தலைவர் சகாதேவன், கோட்ட பொறுப்பாளர் கோதண்டபாணி, முத்துகிருஷ்ணன், மோகன்,  இளைஞரணி சுரேஷ், ஆவணி, வெங்கடேசன், ராம்குமார், சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


  இத்தகவலை அமைப்பு சாரா பிரிவின் கோட்ட பொறுப்பாளரும்,  தையல் பிரிவைச் சேர்ந்த கோதண்டபாணி, மற்றும் மரக்காணம் ஒன்றிய இளைஞரணி சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.