வித்தகன் மலர் விளக்கேற்றி வழிபாடு நாங்கள் இருக்கிறோம்


  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை ஏற்று 05-04-2020 இரவு சரியாக 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு  புதுச்சேரி வித்தகன் மலர் பத்திரிக்கை அலுவலகம் மற்றும் வீட்டின் மூலைகளில் அகல் விளக்கு ஏற்றி துர்கா கவசம் படிக்கப்பட்டது. நாட்டு மக்களை காப்பதற்காகவும், கொடிய தொற்று நோயான கொரோனா வைரசிடமிருந்து  பாதுகாக்கவும், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நாட்டு மக்களை அவரவர் வீடுகளில் விளக்கேற்ற கேட்டுக் கொண்டார்.


  அவரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் விளக்கேற்றினர்  நாங்கள் பக்க பலமாக இருக்கிறோம் கவலை வேண்டாம். கொரோனாவை விரட்டி அடிப்போம் என்று விளக்கேற்றி சொல்லாமல் சொல்லி விட்டனர் பாரத மக்கள்.வாழ்க பாரதம். வாழ்க மக்கள் நலமோடும், வளமோடும்.