நிம்மதியான தூக்கம் பெற ஜேஷ்டா விரதம் ...
யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும், மூத்த தேவியான ஜேஷ்டா தேவிக்கும் சர்ச்சை உண்டானது. இருவரும் நாரதரை அணுகினார்கள்.ஸ்ரீ தேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூத்ததேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூத்த தேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். அதனால் நாரதர் இருவரையும் முன்னும், பின்னுமாக நடந்து காட்டச் சொன்னார். ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூத்ததேவி போகும் போது அழகு!" என்று நாரதர் சொல்ல இருவருக்குமே மகிழ்ச்சி.
மூத்ததேவி எனும் ஜேஷ்டா தேவி
வீடுகளில் யாராவது மூதேவி என்று திட்டினால் அப்படி சொல்லக் கூடாது என்று நம் வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பார்கள்.அவர்கள் அப்படி திட்டும்போது மூதேவியை அவர்களை அறியாமலேயே மனதார வணங்கி துதிக்கிறார்கள் என்று அர்த்தம்.மூதேவி என்பவள் புராணங்களின் படி மகாலஷ்மியின் மூத்த சகோதரி. அவளும் லஷ்மி தேவியைப் போல துதிக்கப்பட வேண்டியவள். அவள் தீய தெய்வம் அல்ல. தீமையை எடுத்துக் காட்டி உயிரினங்களை நல் வழிப்படுத்த விஷ்ணுவினால் தோற்றம் தரப்பட்டவளே மூதேவி என்பவள்.
ஜேஷ்டா தேவி வழிபாடு:
இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி அல்லது மூத்த தேவி ஆகும்.ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்குவதோடு, ஆரோக்கிய வாழ்வின் முக்கியமானதான நிம்மதியான தூக்கத்தை தருகிறது என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
தூக்கமின்மை:
ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் எத்தனை கோடி சொத்து வைத்திருந்தாலும் தூக்கம் இல்லை என்றால் அத்தனையும் வீண்தான்.அன்றைய பொழுது கலக்கத்தோடுதான் செல்லும்..இளைஞர்கள், பணிக்கு செல்வோர் இரவு படுத்தவுடன் தூக்கம் வராது,அவர்கள் படம் பார்ப்பது, மெசேஜ் செய்வது, பாடல்கள் கேட்பது உருண்டு புரண்டு படுப்பது என்று இருப்பார்கள்.
நல்ல தூக்கம் ஒருவருக்கு இருந்து விட்டால் அது ஒரு வரப்பிரசாதமாகும். துாக்கமின்மையால் பாதிப்படைவது மூளை. தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் ஏராளமான தொடர்பு இருக்கிறது. நல்ல மனநிலை, அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கலைத்து விடுகிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும்.
தூக்கத்தின் முக்கிய காரகரான புதனின் நாளில் ஜேஷ்டா நக்ஷத்திரம் எனும் கேட்டை நக்ஷத்திர நாளில் புதனையும் ஜேஷ்டா தேவியையும் வணங்கி வளமான வாழ்வும் நிம்மதியான தூக்கமும் பெற்று வாழ்வோமாக!
ஜேஷ்டா தேவி கோயில்: எங்கிருக்கிறது...