கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இல்லங்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நாம் தனி ஆட்கள் இல்லை. 130 கோடி பேரும் ஒன்றாக இருக்கிறோம். நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஔி மயமான காலத்தை கொண்டு வர வேண்டும். வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் உறுதியுடன் கொரானாவை ஒழிக்க வேண்டும். உற்சாகமாக இருக்க வேண்டும். ஒன்று பட்டு கொரானாவை வெல்ல வேண்டும்.அமைதியாக இருந்து நாட்டு மக்களை பற்றி சிந்தியுங்கள். ஒன்றாக இருந்து கொரானாவை வெல்ல நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.கொரானாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டு இந்தியா