பட்டுப் புடவை பராமரிப்பின் இரகசியம்!
*பட்டு சேலைகளில் சென்ட்டை தடவிக்கொண்டால், சென்ட் பட்ட இடத்தில் துணி விரைவில் நைந்துவிடும். அதுபோல் உருண்டை (ரசக்கற்பூரம்) நேரடியாக புடவையின் மீது வைக்கக்கூடாது.
*பட்டு சேலை துவைக்கும்போது நாம் தலைக்குத் தேய்க்கும் ஷாம்பூ ஒரு பாக்கெட் எடுத்து தண்ணீரில் நன்றாகக் கலந்து 5 நிமிடம் ஊறவைத்து பின் அலச வேண்டும்.
*பட்டுப் புடைவையில் எந்த இடம் கரை பட்டுள்ளதோ அந்த இடத்தில் மட்டும் அதிக ஷாம்பு போட்டு 2 நிமிடம் கசக்க வேண்டும்.
*அதேபோல் பட்டு புடவை துவைக்கும் போது சாயம் போகும் என்பதால் தனித்தனியாக தான் துவைக்க வேண்டும்.
ஒன்றோடு மற்றொன்று கலக்கக்கூடாது. புடவையும் ரவிக்கையும் சரி தனித்தனியே அலச வேண்டும்.
*பட்டு புடவை வெகுநாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் துணி நைந்து போகும் அதனால் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை புடவையை மாறிமாறி மடித்து வைக்க வேண்டும்.
*பட்டுப் புடவையை காய போடும் போது உள் புறத்தை வெளியே திருப்பி உலர்த்த வேண்டும். அப்பொழுது தான் துணி மங்காது. இதற்கு மிதமான வெய்யிலே போதுமானது.
*அதேபோல் பட்டு புடவை சலவை (ironing) செய்யும் போது உட்புறமாக தான் சலவை செய்ய வேண்டும்.
*பட்டுப் புடவை மட்டுமில்லாமல் பட்டுச்சட்டை, பட்டு வேட்டி, பட்டுப்பாவாடை, ஜிமிக்கி புடவை, விலை உயர்ந்த சுடிதார் ஆகியவற்றை ஷாம்பு போட்டு துவைத்தால் துணி புதிது போலவே இருக்கும்.
இதுபோல் சின்ன சின்ன வேலைகளை நாமே செய்துக் கொள்ளலாம். இதை வெளியில் கொடுத்து தான் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. கேட்டால் நேரமில்லை என்பீர்கள், அதுதானே? நம் பொருளை நாம் தானே பாதுக்காக்க வேண்டும். செலவுகளையும் குறைக்க முடியும், யோசியுங்கள்!