நானே உனக்கு துணை


 உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்றாரே?


இரைக்கும் சுடற்கிந்த எந்தாய்! - உரைப்பெல்லாம்


நின்னன்று மற்றிலேன் கண்டாய் எனதுயிர்க்கோர்


சொன்னன்றி யாகும் துணை.


                                                         பெரிய திருவந்தாதி


                                             பொருள்


  சப்தம் நிறைந்த திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள என் இறைவனே! தந்தையே! நன்றாக  ஆராய்ந்து பார்த்துக் கூறினால், சுற்றத்தவர்கள் என்றும் வேண்டிய பந்துக்கள் என்றும் கூறப்பட்டவர் யாவருளர்? என் ஆத்மாவுக்கு உற்ற துணையாகிய பந்துவும் சுற்றமும் நீயேதான். “நானே உனக்கு துணை“ என்று கூறும் உன்னுடைய ஒரு சொல்லாலே நீ அன்றோ எனக்குத் துணை ஆகிறாய்!  மற்றைய உறவினர் சுற்றத்தார் என்று கூறப்படுகிறவர்கள் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.