5 ஆம் தேதி விளக்கேற்றுங்கள் மோடி வேண்டுகோள்


  பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர்  ஏப்ரல் 5 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் விளக்கேற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.அந்த சமயம் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகு வர்த்தி, டார்ச் லைட் கொண்டு வீட்டின் 4 மூலைகளிலும் ஒலி பாய்ச்ச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே நாட்டு மக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த உழைத்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு கை தட்டி பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.