விவசாயிகளை தடுக்க வேண்டாம் நாராயணசாமி உத்தரவு


  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.ஊரடங்கு உத்தரவும் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும். இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை எனவும், அவ்வாறு கொண்டு செல்லும் விவசாயிகளை தடுத்து நிறுத்த வேண்டாம் எனவும் முதல்வர் நாராயணசாமி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.