கொரோனா நோயாளிகள் ரகசியம் காக்கப்படும் ஜிப்மர்


                               புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் விடுத்துள்ள அறிவிப்பு செய்தி


   ஜிப்மர் மருத்துவமனை கோவிட் 19 தொற்று நோய்க்கான அனைத்து மருத்துவ பரிசோதனைகள், வைத்திய முறைகள் மற்றும் அது சார்ந்த வசதிகளை நோயாளிகளுக்கு உடனுக்குடன் அளிக்க கடமைப்பட்டுள்ளது. ஜிப்மரில் அதற்குண்டான அனைத்து வசதிகளையும் இந்திய அரசின் விதிமுறைக்கு ஏற்ப செயல் படுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மருத்துவமனை வளாகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், இந்திய அரசாங்கத்தின் அறிவுரைக்கிணங்க கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் சமூக வலை தளங்களில் கோவிட் 19 தொற்று தொடர்பாக போலியான ஊடக விவரங்கள் பகிரப்படுகின்றன. இந்த போலியான தகவல்களில் சித்தரிக்கப்பட்ட நோயாளிகளின் பெயர், வீட்டு விலாசம், மற்றும் அவர்களின் புகைப்படம் ஆகியவையுடன் ஜிப்மர் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் போலியானவை மட்டும் அல்ல சட்ட விரோதமானவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


ஜிப்மர் மருத்துவமனையில் மார்ச் 20ம் தேதி மாலை வரையில் பரிசோதனை செய்ய பட்ட அனைத்து நபர்களுக்கும் கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நோயாளிகளின் பெயர், மற்றும் அவர்களின் மருத்துவ விவரங்கள் அடங்கிய தனிப்பட்ட உரிமைகளை காப்பது ஜிப்மர் மருத்துவமனையின் கடமையாகும். எந்த சூழ்நிலையிலும் வைத்தியம் செய்யும் மருத்துவர்களை தவிர வேறு எவருக்கும் நோயாளிகளின் பரிசோதனை விவரங்கள் பகிரப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த அறிவிப்பு பொது மக்கள் மற்றும் நோயாளியிடம் கோவிட் 19 தொற்று சம்பந்தமாக தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதற்காக வெளியிடப்படுகிறது.