புதுச்சேரியில் கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து வருகிறார்.இதன் ஒரு கட்டமாக புதுச்சேரியில் 23 ஆம் தேதி காலை முதல் ஊரடங்கு தடையை முதல்வர் நாராயணசாமி பிறப்பித்தார்.ஆனாலும் இதற்கெல்லாம் மக்கள் கட்டுப்படாமல் தெருக்களில் சுற்றி திரிந்தனர்.இதைக் கண்ட முதல்வர் வேதனை அடைந்தார்.மக்களின் நலனுக்காக எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒரு சில மக்கள் ஆதரவு தருவதாக இல்லை என்பதை உணர்ந்து 144 யை முழு ஊரடங்கு உத்தரவாக பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு மார்ச் 23 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஊரடங்கு அமல்