கரோனா வைரசுக்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடிக்க முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்போது அவர் பேசுகையில் சர்வதேச அளவில் இப்போது புதிய நோய்கள் வந்து கொண்டிருக்கிறது.தற்சமயம் கரோனா வைரஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.அப்படிப்பட்ட வைரசை தடுக்க தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து சர்வதேசத்துக்கே முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கே.பழனிசாமி பேசினார்.