புதுச்சேரியில் கடைகள் திறக்க கட்டுப்பாடு


  புதுச்சேரியில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த முதல்வர் நாராயணசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊரடங்கு உத்தரவும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதன் ஒரு கட்டமாக புதுச்சேரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.காலை 6 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரை அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும். மாலை 6 மணி வரை பணியில் உள்ளவர்கள் மட்டும் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம்.