தமிழகத்தில் கொரோனா வைரசை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இருந்தாலும் மக்கள் அரசோடு ஒத்துழைக்கவில்லை.காரணம் வைரசுனுடைய வீரியத்தை இன்னும் மக்கள் உணரவில்லை.தமிழக அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்து வந்தும் மக்கள் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக மக்களின் நலனுக்காக மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்படுகிறது.இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்படும்.காவல் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்.தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.