தமிழ் புத்தாண்டுக்கு பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு


  தமிழகத்தில் கொரோனா தொற்று நோயை தடுக்கும் விதமாக மக்கள் ஒன்று கூடும் முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றது. வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 31 ஆம் தேதி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மார்ச் 27 ஆம் தேதி நடக்க இருந்த பொது தேர்வுகள் தள்ளி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில்  சட்டபேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கோரிக்கையை பரிசீலித்து 10 ஆம் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார்.இந்த தேர்வுகள் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் தொடங்கும்.அதற்கான அட்டவணை பிறகு அறிவிக்கப்படும் என்றார் முதல்வர். அதே சமயம் 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றார். 9 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதுவும் தெரிவிக்கவில்லை.