50 வயதில் இளைஞன்..............
புதுச்சேரி காங்கிரஸ் அரசின் உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம். 50 வயது இளைஞன். 50 வயது பொன் விழா தொடுவது இந்த காலத்திலே ஒரு சிலருக்கு கிடைக்கும் பாக்கியம்.அது அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கிடைத்திருக்கிறது என்று ஆதரவாளர்கள், பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது எதைக் காட்டுகிறது என்றால் நமச்சிவாயத்தின் சேவை, இந்த புதுச்சேரி மக்களுக்கு தேவை என்பதை காட்டுவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 50 வயதில் இளைஞனாய் பம்பரம் போன்று சுழன்று பணிகளை செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்கின்றனர் ஆதரவாளர்கள்.
புன்னகை மன்னன் நமச்சிவாயம்......
எல்லோரிடத்திலும் அன்பாகவும், பாசமாகவும் பழகக்கூடியவர் நமச்சிவாயம். எளிமையாக உடை உடுத்தக்கூடியவர். தனது புன்னகையாலே எப்பேற்பட்ட மக்களையும் தன்பால் ஈர்த்து அரவணைத்து அவர்களை தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்றவர். கோபத்தை அவரிடம் பார்க்க முடியாது. அதர்மம் அவரை சூழ்கிறது என்று தெரிந்தால் புயல் போல கோபம் கொள்வார். அந்த கோபம் கூட நியாயமான கோபமாகத்தான் இருக்கும் என்கின்றனர் அவரை நன்கு அறிந்த வட்டாரங்கள்.
காத்திருக்கும் நமச்சிவாயம்....
தங்கள் தலைவன் நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணி செய்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் நினைப்பதை நிறைவேற்றி தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். நமச்சிவாயம் செய்ய காத்திருக்கிறார்.ஆனால் பொறுமை அவசியம் வேண்டும் என்கின்றனர் பார்வையாளர்கள்.
வாராய்! நீ வாராய்!!
தனது தொகுதி மட்டுமல்ல மாநிலம் முழுவதும் ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள், பொது மக்கள் என பாகுபாடில்லாமல் அனைவர் வீட்டு சுப காரியங்கள் மற்றும் மற்ற எந்த நிகழ்வாக இருந்தாலும் ஓடிச்சென்று கலந்து கொள்ளும் பாச உறவு கொண்டவர் நமச்சிவாயம். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். நமச்சிவாயத்தின் நல்ல எண்ணங்களே! நல்ல சிந்தனைகளே!! அவரது வெற்றியின் மர்மமாகும்.
பின் தொடரும் மக்கள்.......
மனதில் பட்டதை பளிச்சென கூறும் நமச்சிவாயம்.உள்ளதை உள்ளபடியே செய்வார்.அதனால்தான் கட்சி, சாதி பாகுபாடின்றி அவரை பின் தொடர்கின்றனர் பொது மக்கள். எதிர்ப் பார்ப்பை நிறைவேற்றுவார் என மக்கள் காத்திருக்கின்றனர்.
ஆன்மிகவாதி
ஆன்மிகத்திலே அதிக ஈடுபாடும், நாட்டமும், நம்பிக்கையும் கொண்டவர். கோயிலுக்கு சென்றால் தன்னை மறந்து தெய்வங்களை வணங்கும் ஆன்மிகவாதி.