அம்மா! ஒரு தியாகச்சுடர்!!
2 நிமிடக் கதை
அம்மா இன்னைக்கு சண்டே. மகனின் குரல் கேட்ட தாய் படுக்கையை விட்டு எழுந்தாள்.கடை வீதிக்கு சென்றவள் மீன் வாங்கி வந்து குழம்பு வைத்தாள்.சிலந்தி வலை போல பாச வலைக்குள் தன் மகனை தாலாட்டி, சீராட்டி வளர்த்தாள்.மகன் கீர்த்தனுவுக்கு மூன்று வயது இருக்கும் போது கணவன் வடமலை இறந்து விட்டார்.சிறகொடிந்த பறவையாய் ஆனாலும் தன் மகனுக்காக அவனை சமுதாயத்தில் சிறந்தவனாக உருவாக்கிட தன் மனதில் உறுதி எடுத்து கொண்டாள்.கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தினாள்.மீன் குழம்பை பரிமாறிய குமுதாவின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.அதனை துடைத்த மகன் கவலை வேண்டாம் அம்மா நான் இருக்கிறேன். இறுதி வரை கண் கலங்காமல் காப்பாற்றுவேன். குறிப்பாக முதியோர் இல்லத்தில் விடாமல் என்னுடன் வைத்துக் கொள்வேன். மகனின் பேச்சைக் கேட்டு பூரிப்படைந்த குமுதா மகனை அணைத்து உச்சிப் பொட்டில் முத்தமிட்டாள். தனக்காக வாழாமல் மகனின் வாழ்வுக்காக தனது வாழ்வை தியாகமாக்கிய குமுதா ஜொலிக்கிறாள் சுடராய்.
ஆக்கம் - நாராயணதாசன்